பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ) ஆரணிய காண்ட ஆய்வு

இங்கே, காசு இல்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி என்று பாடப்படும் ஒரு வகைப்பாடல் நினைவுக் கூரத் தக்கது.

இப்பேர்ப்பட்ட விலைமாது ஒருத்தியிடம், கடன் சொல்லி உடலுறவு கொண்டு போனானாம் ஒருவன். அந்தக் கடனைக் கேட்க அவள் நடையாய் நடந்தாளாம். இந்தக் கதை கம்பன் பாடலுக்கு விடும் அறைகூல் (சவால்) ஆகும். இதை விரிப்பின் பெருகும்.

அடுத்தது. இன் முகம் இன்றிக் கடுகடுப்புடன் நோக்குவோர் வீட்டிற்குச் செல்லும் விருந்தினர், எந்தப் போற்றுதலும் இன்றி வறிதே திரும்ப வேண்டியதுதான்.

"மோப்பக் குழையும் அனிச்சம், முகம்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து (90) என்னும் குறள் ஈண்டு எண்ணத் தக்கது. பிடித்துத் தள்ளினும் போகாமல், எப்படியாவது உணவு கிடைத்தால் போதும் என்று அந்த இடத்திலேயே ஆணி அடித்துக் கொண்டு - வேர் பாய்ந்து அமர்ந்து விடுபவரைக் குறிக்காமல், முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்தினரைக் குறிப்பதற்காக நல் விருந்து' என்றார் கம்பர் பெருமான்.

மூன்றாவது:- தவசியரை விரும்பிய பெண்ணின் நோக்குப் பயனின்றித் திரும்புமாம். எடுத்துக்காட்டுகள்: தவக்கோலமுடைய இராமனை விரும்பிய சூர்ப்பணகையின் நிலை இன்னதே. அல்லமர் என்னும் அருளாளரை விரும்பிய மாயை என்னும் பெண் எவ்வளவோ முயன்றும் அவரை அடைய முடியவில்லை என்பது பிரபுலிங்கலீலை என்னும் நூல் கதை. இன்ன பிற.

யோகியர் தன் நோக்கிய நெஞ்சு உடையவராம். தன் நோக்குதல் இறைவனை நோக்குதல். தான் என்பது