பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 235

இறைவன். தன்னையே இறைவனாக நோக்கிச் செயல் படுபவர் யோகியர். திருமூலர் தான் அவனாகி' எனப் பல இடங்களில் கூறியுள்ளார். பிரபுலிங்கலீலையில் உள்ள

"பூதம் அேலை, பொறிகளும்அலை, அலைபுத்தி

ஏதும் நீஅலை, இவற்றினை மயங்கி யான் என்னும் போதம் நீஅலை, என்றிவை அனைத்தையும் போக்கிச் சோதி ஆகிய பிரமமே t' (17: 13) 'செறிந்தமூல ஆங்காரத்தின் வேறெனத் தீர்ந்திட்டு

இறந்திடாது தன்கண்டவன் என்னையும் காண்பான்' (19: 31)

என்னும் பாடல்களும்,

"தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்’ என்னும் சிவஞான போதம் - அவையடக்கப் பகுதியும் இங்கே எண்ணத் தக்கன. இது மிகவும் சிக்கலானதும் கருத்து வேறுபாடு உடையதுமாகும்.

பிழையா நெடுவாள்

என்ன செய்தாலும் சடாயுவை அழிக்க முடியவில்லை யாதலின், போரின் இறுதிக் கட்டமாக இராவணன், சிவன் தனக்குத் தந்த தவறாத வாளால் சடாயுவை வெட்டி வீழ்த்தினான். சடாயு கீழே விழுந்து விட்டான்.

'செவ்வே பிழையா நெடுவாள் உறைதீர்த்து எறிந்தான்' (127)

இன்னமும் இயற்றுமோ?

சடாயு வீழ்ந்ததும் சீதை வருந்துகிறாள். இலக்குவனை

மறுத்துப் போகச் செய்தேன், சடாயு சிறகு இற்று வீழ்ந்தார்.

இன்னமும் என்னென்ன நேர உள்ளனவோ. விதி என்ன

செய்யுமோ!