பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 ) ஆரணிய காண்ட ஆய்வு

கொளு 'விலங்கமருள் வியல் அகலம்

வில்லுதைத்த கணைகிழிப்பு நிலந்தீண்டா வகைப் பொலிந்த

நெடுந்தகை நிலை உரைத்தன்று”

வெண்பா “வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப

எங்கும் மருமத் திடைகுளிப்பச்செங்கண் புலவாள் நெடுந்தகை பூம் பொழில் ஆகம் கலவாமல் காத்த கணை” (7 : 23: 1, 2) இவ்வாறு விராதன் மேலும் அம்புகள் தைத்தன. பீழ்சுமர் அம்புப் படுக்கையில் கிடந்தார் என்பது பாரதக்

கதை.

விராதனின் சோர்வு

அம்புகள் தைத்ததும், அருவி பாயும் மலை போல் குருதி ஆறு பாயும் உடம்பினனாய், மிடுக்கு வலிமை கெட்டு உணர்வு சோர்ந்தான்:

'அருவி பாயும் வரைபோல் குருதி ஆறு பெருகிச்

சொரிய வேக வலிகெட்டு உணர்வு சோர்வுறுதலும்” (33) மலையினும் விராதன் உடல் சிறியது; ஆனால், பெரிய மலையினின்றும் வருவது சிறிய அருவி; விராதன் உடலிலிருந்து பாய்வதோ குருதி ஆறு. அருவியினும் ஆறு பெரியதன்றோ? இராமனின் அம்பின் ஆற்றலைப் புலப் படுத்தும் அரிய உவமை இது.

விராதனும் கருடனும்

விராதன் பல அருளிப்பாடுகள் (வரங்கள்) பெற்றுள்ள

மையால் படைக்கலம் ஏவி அவனைக் கொல்லல் அரிது;

அவன் தோள்களின்மேல் ஏறி வாள் கொண்டு அவனுடைய