பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 m ஆரணிய காண்ட ஆய்வு

மண்ணொடு மறைந்த கிதி சீதையைக் காணாது கசந்து வெறுத்து நின்ற இராமனுக்கும் கம்பர் ஒரு சிறந்த உவமை கூறித் தமது புலமையை மேலும் கூர்மைப் படுத்தியுள்ளார். உவமை:

இனிப் பிழைப்புக்கு வேறு எந்த வழியும் வாய்ப்பும் இல்லாத ஏழை ஒருவன், இனி உதவுவதற்காக மண் பாண்டத்தில் போட்டு மண்ணுக்குள் மறைத்து வைத்திருந்த செல்வப் பொருளை வஞ்சகன் ஒருவன் எப்படியோ அறிந்து மண்ணை அகழ்ந்து மண்பாண்டத்தோடு அப்பொருளைத் திருடிக்கொண்டு போய் விடின், வந்து பார்த்துக் காணாது எவ்வாறு திகைத்து வருந்துவானோ அவ்வாறு இராமன் திகைத்து நின்றானாம்.

கைத்த சிந்தையன் கணங்குழை அணங்கினைக் காணாது, உய்த்து வாழ்தர வேறொரு

பொருளிலான் உதவ வைத்த மாநிதி மண்ணொடு

மறைந்தன வாங்கிப் பொய்த்து ளோர்கொளத் திகைத்து

கின்றானையும் போன்றான்” (159) கைத்த சிந்தையான் = இராமன். அணங்கு = சீதை. வேறொரு பொருள் இலான் = மிக்க ஏழை.

இராமன் சீதையைத் தவிர வேறு பெண்ணை விரும்பாதவன். ஒரே மனைவி நோன்பினன் (ஏக பத்தினி விரதன்). இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று சூள் உரைத்திருப்பவன். இதனாலேயே வேறு பொருள் இல்லாத வறிஞன் இராமனுக்கு உவமை யாக்கப் பட்டான்.

ஏழை வைத்த மாநிதி போன்றவள் சீதை. பொருள் மண் கலயத்தோடு எடுத்துச் செல்லப்பட்டமை, குடிலை