பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் ) 2.41

மண்ணோடு பெயர்த்து இராவணன் எடுத்துச் சென்றமைக்கு உவமையாகும். பொருளை எடுத்துச் சென்ற பொய்யர் சீதையைத் திருடிச் சென்ற இராவணனுக்கு ஒப்புமை. வறிஞனது திகைப்பு இராமனது திகைப்புக்கு ஒப்பு.

வேறு மனைவியை மணந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளவர்களும் இருந்த மனைவி இறந்து போய் விடின் வருந்தவே செய்வார்கள் என்றால், அந்த வாய்ப்பு இல்லாதவர்களின் துயரத்திற்கு எல்லை ஏது?

இலக்குவனின் வேண்டுகோள்

இலக்குவன் கூறுகிறான்: வருந்துவதால், பயன் என்ன? தீண்டக் கூடாதென எவனோ குடிலோடு பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளான். தேரின் சுவடு தெரிகிறது. இந்தச் சுவடு வழியே செல்லின், கொண்டு போகிறவன் நெடுந்தொலைவு செல்லுமுன் கண்டு பிடித்து விடலாம்.

“தூரம் போதல்முன் தொடர்தும்’ (162) என்றான். அவ்வாறே செல்ல, சிறிது தொலைவில் தேர்ச் சுவடு, மறைந்து விடுகிறது. இராமன் வருந்துகிறான். இலக்குவன், வருந்தற்க; விண் வழி சென்றுள்ளான்; விண் நினது அம்பு போக முடியாத அளவுக்கு மிக உயர்ந்ததன்று.

"வானம் விற்கு நோக்கிய பகழியின் நெடிதன்று”

(165)

என்று கூறித் தேற்றினான். போகப் போக, வழியில் இராவணனுடைய வீணைக் கொடி, வில், அம்பறாத் துணி, கவசம், இறந்த குதிரையின் உடல், இறந்த தேர்ப்பாகனின் உடல் முதலியவற்றைக் கண்டனர். கொடி முதலியன அலகால் அறுக்கப்பட்டன போல் தெரிதலின் சடாயு போர் புரிந்திருக்கவேண்டும் என எண்ணுகின்றனர்.