பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 о ஆரணிய காண்ட ஆய்வு

பல குண்டலங்கள்

பல குண்டலங்களைக் கண்டதும், பலர் போர் செய்துள்ளனர் என இராமன் எண்ணுகிறான். உடனே இலக்குவன், பலர் பொரவில்லை; இராவணனுக்குப் பத்துத் தலைகள் இருப்பதால் (10x2=20) பல குண்டலங்கள் போரில் சிதறி வீழ்ந்துள்ளன; எனவே பொருதவன் இராவணன் என்னும் ஒருவனே:

"ஒருவனே அவன் இராவணனாம் என உரைத்தான்'

(178)

வெள்ளிமேல் அஞ்சனம்

சிறிது தொலைவில் சடாயு வீழ்ந்து கிடத்தலைக் கண்டனர். சிவனது வெள்ளி மலைமேல் கரிய மைம்மலை வீழ்ந்தது போல் இராமன் சடாயு மேல் விழுந்து அரற்றினான் -

'வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலையென வீழ்ந்தான்' (180) சிறிது நேரம் உணர்வின்றிக் கிடந்த இராமனை இலக்குவன் எழுந்து இருக்கச் செய்து முகத்தில் தண்ணிர் தெளித்ததும் இராமன் விழித்துக் கூறலானான் (181) தந்தையைக் கொன்ற மைந்தர்

சடாயுவே! உலகில் தந்தையைக் கொன்ற மைந்தர் யார் உளர்? முன்பு நாட்டில் என்னால் தந்தை தயரதன் இறந்தார். இங்கே நீயும் என் காரணமாய் இறந்தாய். அந்தோ! யான் எமனாக வாய்த்தேனே:

“தம் தாதையாரைத் தனயர் கொலை நேர்ந்தார்

முந்து ஆரே உள்ளார்? முடிந்தான் முனை ஒருவன் எந்தாய் ஓ எற்காக நீயும் இறந்தனையோ

அங்தோ வினையேன் அருங்கூற்றம் ஆனேனே'

(182)