பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 243

திரேதா யுகத்தில் தந்தையைக் கொன்ற மைந்தன்

JD நத இல்லை என இராமன் கூறியதாகக் கம்பர் பாடியுள்ளார்.

ஆனால், அந்தணன் ஒருவன் தந்தையைக் கொன்று

தாயைப் புணர்ந்ததாகவும், அவனுடைய மாபாதகத்தையும்

கடவுள் தீர்த்ததாகவும், பரஞ்சோதி திருவிளையாடல் புராணம் - மாபாதகம் தீர்த்த படலம் கூறுகிறது.

- பலர் தந்தையைக் கொன்றதாக இக்காலத்தில் செய்தித்தாளில் படிக்கிறோம். . .

இவற்றையெல்லாம் நோக்குங்கால், இராமர் மிக உயரிய பண்பினர் என்பதும் பண்டைக் காலம் மிகவும் உயர்ந்த காலம் என்பதும் தெரியவரும்.

நெடுமரம்

மேலும் இராமன் புலம்புகிறான்: என் மனைவியைக் கவர்ந்தவனை எதிர்த்து நீ இறக்கின்றாய்; உன்னைக் கொலைக்கு உள்ளாக்கிய இராவணன் உயிரோடு உள்ளான் யானோ வில்லும் அம்புக் கடலையும் சுமந்து கொண்டு நெடுமரம் போல் நிற்கின்றேன்.

“என் தாரம் பற்றுண்ண ஏன்றாயைச் சான்றோயைக் கொன்றானும் கின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய் வன்தாள் சிலை ஏந்தி வாளிக் கடல் சுமந்து கின்றேனும் கின்றேன் நெடுமரம் போல் கின்றேனே" (185) இராமன் தன்னை நெடுமரம் என மிகவும் தாழ்த்திக் கொள்கிறான். உலகியலில் பயனற்ற ஒருவனை நோக்கி, ஏண்டா மரம் போல் சுவர்போல் உலக்கைபோல் நிற்கிறாய் என்று பிறர் கேட்பதுண்டு. ஆனால் இராமன் தன்னைத் தானே அவ்வாறு சொல்லிக் கொள்கிறான்.