பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 245

சடாயு இருவரையும் நோக்கி நடந்ததை வினவ, இலக்குவன், மாயமான் வந்தது முதல் இதுவரை நடந்த அனைத்தையும் விவரமாகக் கூறினான்:

'வன்திறல் மாயமான் வந்தது ஆதியா

கின்றது நிகழ்ந்தது நிரப்பினானரோ” (191)

விதியும் மதியும்

கேட்ட சடாயு ஆறுதல் கூறலானான்: ஒருவராலும் ஒரு புதுமையும் செய்ய முடியாது. பிறவி எடுத்ததின் தொடர்பாக உண்டாகும் இன்பமோ - துன்பமோ விதியினால் வருவது. இதை நம்பா விடின், மதியினால் விதியை வெல்ல முடியுமோ? (முடியாது)

'அதிசயம் ஒருவரால் அமைக்க லாகுமே துதியறு பிறவியின் இன்ப துன்பம்தான் விதிவயம் என்பதை மேற்கொள்ளா விடின் மதிவலியால் விதி வெல்ல வல்லமோ? (193) இங்கே விதி என்பது குறித்துச் சிறிது ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஊழை வெல்லும் வல்லமை உடையது வேறு எதுவும் இல்லை. மதியாலோ வேறு எதாலோ ஊழை வெல்ல முயற்சி எடுத்தாலும், ஊழே முன்னின்று எதிராக எடுக்கும் முயற்சியைக் குலைத்து விடும் என்னும் கருத்துடைய

'ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்” (380) என்னும் குறள் ஊழின் வலிமையை வலியுறுத்துகிறது. இதுபற்றி ஊழ் என்னும் தலைப்பு இட்டுப் பத்துப்பாக்கள் பாடியுள்ளார் வள்ளுவர்.

ஊழ் பிறந்த வரலாறாவது: நல்லவன் கேடும் தீயவன் நன்மையும் அடைவதற்குத் தீர்வு சொல்ல முடியாத நம்