பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 247

இதையே தான், அன்று, சடாயு இராம இலக்குவரிடம் செய்திருக்கிறான். அதாவது விதியைத் துணைக்கு அழைத்து அவர்கட்கு ஆறுதல் கூறியிருக்கிறான்.

மற்றும், சடாயு, வல்லவர் பலர் விதிவலியால் துன்புற்ற வரலாறுகளை நினைவுபடுத்தி அவர்களைத் தேற்றினான். இறுதியாக, இராவணன் தன்னை வாளால் வெட்டி வீழ்த்தியதைக் கூறியதும், இராமன் பொறுக்கமுடியா தவனாய், உன்னை இவ்வாறு செய்தமைக்காக இந்த உலகையே அழித்து விடுகிறேன் பார் - என்றான்:

"இக்கணம் ஒன்றில் நின்ற

ஏழினோடு ஏழு சான்ற மிக்கன போன்று தோன்றும்

உலகங்கள் வீயு மாறும் திக்குடை அண்ட கோளப்

புறத்தவும் தீந்து நீரின் மொக்குளின் உடையு மாறும்

காண் என முனியும்’ (206) இவ்வாறு எல்லாவற்றையும் அழித்து விடுவேன் என இராமன் கூறியது போர் ஊக்கமாகும்.

மூன்று அகவையுடைய குழந்தை, தன் விருப்பம் நிறைவேறாவிடின், அப்பா அம்மாவை அடிக்கிறது - எதிரே உள்ளனவற்றையெல்லாம் தள்ளுகிறது - எடுத்து வீசுகிறது . கண்டதை அடிக்கிறது - உடைக்கிறது. இது போர் ஊக்கம்.

பெரியவர்களுள் சிலர், தமக்கு மாறான நிகழ்ச்சிகள் நாட்டில் நடைபெறின், கண்டதை இடிக்கிறார்கள் - உடைக்கிறார்கள்; பலவகை ஊர்திகளைக் கொளுத்து கிறார்கள் - புகைவண்டித் தண்டவாளத்தைப் பெயர்க் இறார்கள் - இன்னும் என்னென்னவோ இதுபோல் செய்கிறார்கள்,