பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர சண்முகனார் 0 23

கைகளை வெட்ட வேண்டுமென எண்ணி இராம இலக்குமணர் அவன் தோள்களின் மேல் தாவி ஏறிக் கொண்டனர்.

நாடோறும் மேரு மலையைச் சுற்றும் ஞாயிறும் திங்களும் போன்ற இராம இலக்குமணரைச் சுமந்து கொண்டு விராதன் 'கர கர என்று சுழன்றான்.

இராம இலக்குமணரைத் தோள்களின்மேல் சுமந்து கொண்டிருக்கும் விராதனுக்குக் கம்பர் ஒரு புராண வரலாற்று உவமை கூறியுள்ளார்.

கண்ணபிரானின் பேரனாகிய அனிருத்தன், தன் மகளாகிய உழ்சாவைக் காதலித்ததற்காக வாணன் என்னும் அரக்கன் அவனைச் சிறையில் அடைத்து விட்டானாம். வாணனை வென்று அனிருத்தனைச் சிறை மீட்பதற்காகக் கண்ணபிரானும் (கிருஷ்ணனும்) பலராமனும் பறவை அரசனாகிய கருடன்மேல் ஏறி வந்தார்களாம். கண்ணனை யும் பலராமனையும் தோளில் சுமந்த கருடனைப் போல, இராம இலக்குமணரை விராதன் தோளில் சுந்திருந்தானாம்என்பது கம்பரின் பொருத்தமான உவமையாகும்.

'முந்து வாள் முகடுற கடிது முட்டி முடுகி

சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன் அரோ வந்து மேருவினை நாள்தொறும் வலம் செய்து உழல்வோர் இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே (35)

'சுவண வண்ணனொடு கண்ணன் இருதோள்கள் பொலிய

அவண விண்ணிடை கிமிர்ந்து படர்கின்றவன் அறம் சிவன அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவத்து உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனனரோ” (37)

என்பன பாடல்கள்.