பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - 249

'வம்பிழை கொங்கை வஞ்சி

வனத் திடைத்தமியள் வைகக் கொம்பிழை மானின் பின்போய்க்

குலப்பழி கூட்டிக் கொண்டீர் அம்பிழை வரிவில் செங்கை

ஐயன்மீர் ஆயுங்காலை உம்பிழை என்ப தல்லால்

உலகம் செய்பிழையும் உண்டோ?” (211) சடாயு, பின்வாங்காமல் தெளிவாக இராம இலக்குவரின் பிழையைச் சுட்டிக் காட்டியது பாராட்டத் தக்கது.

'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு’ (190)

என்னும் குறள் ஈண்டு எண்ணத்தக்கது.

இராமன் உலகங்களை யெல்லாம் அழித்து விடுவேன் என்று கூறியதால், உம் பிழையே யன்றி உலகின் பிழை யில்லை என்று சடாயு கூறினான். இதைச் சுட்டிக் காட்டியதும் இராமன் ஆறுதல் பெற்றான். பணி முடித்த சடாயுவும் உயிர் நீத்தான்.

ஈமக் கடன்

இராமன், தரைமேல் நறுமணமிக்க அகில் கட்டை களையும் சந்தனக் கட்டைகளையும் அடுக்கி, மேலே தருப்பை, மலர் முதலியன பரப்பி, சடாயுவின் உடலை நீராட்டித் தன் கைகளால் எடுத்து ஈம மேடையில் வைத்துச் செய்ய வேண்டியவற்றை எல்லாம் முறைப்படிச் செய்தான்:

'இந்தனம் எனைய என்னக்

கார் அகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும்

தருப்பையும் திருத்திப் பூவும்