பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அயோமுகிப் படலம்

அயோமுகி என்னும் அரக்கியைப் பற்றிய நிகழ்ச்சி களைக் கூறும் படலம் இது. இரும்புபோன்ற வன்மையான முகத்தோற்றத்தை உடையவள் என்பது இப்பெயரின் பொருள். இது, சில சுவடிகளில், அயோமுகி மூக்கரி படலம் எனவும், அதோ முகிப்படலம் எனவும் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது.

விரி இருள்

சடாயவுக்கு இறுதிக்கடன் செய்த பின்னர், இராம இலக்குவர் அந்திமாலையில் மேற்சென்று ஒரு மலைப் பகுதியில் தங்கினர். உடனே கரிய அரக்கர் கூட்டம் போன்ற தோற்றத்தில், துன்பம் தரும் இருட்டு எங்கும் பரவியது. அதாவது இரவு வந்தது:

"அந்தி வந்து அணுகும்வேலை

அவ்வழி அவரும் நீங்கிச் சிந்துரச் சென்னித்து ஆண்டுஓர்

மைவரைச் சேக்கை கொண்டார் இந்திரற்கு அடங்கல் செல்லா

இராக்கதர் எழுந்த தென்ன வெந்துயர்க்கு ஊற்ற மாய

விரிஇருள் விங்கிள்று அன்றே (1)

சிந்துரம் = செந்நிறம்.சென்னி = உச்சி. அந்திமாலையின் செந்நிறம் பட்டதால், கரிய மலையின் உச்சி செந்நிறத் தோற்றம் கொண்டது. சேக்கை = இருப்பிடம்,