பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 253

குவியாத தாமரை

இராமனின் கண்ணாகிய தாமரை குவியவே இல்லை யாம். அதாவது, அவன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை யாம். இராமனாகப் பிறவியெடுத்த திருமாலுக்குச் செந்தாமரைக் கண்ணன் என்ற பெயர் உள்ளமை ஈண்டு நினைவு கூரற் பாலது.

இதற்கு இரண்டு காரணம் கற்பித்துக் கம்பர் கவிச்சக்கரவர்த்தி என்னும் சிறப்புப் பெயருக்கு அரண் செய்துள்ளார்.

ஒன்று:- வெளியில் சென்றிருக்கும் வீட்டிற்கு உரியவர் வீடு திரும்பும் வரையும் வீடு பூட்டப் பெறாமல் திறந்தே வைக்கப்பட்டிருக்கும். (இது அந்தக் காலத்தில்) தாமரையை இருப்பிடமாகக் கொண்ட திருமகளாகிய சீதை பிரிந்துள்ளமையால், அவளை எதிர்பார்த்து இராமனின் கண்தாமரைகுவியவில்லை.

மற்றொன்று:- மதி (நிலா) தோன்றினால் தாமரை குவியும், இப்போது சீதையின் முகமாகிய மதி தோன்றாமை யால் - காணாமையால் இராமனின் கண்தாமரை குவியவில்லை.

இரவில் குவியக் கூடிய தாமரை இந்த இரண்டு காரணங்களால் குவியவில்லையாம்.

“யாமது தெரிதல் தேற்றாம்

இன்நகைச் சனகி என்னும் காமரு திருவை த்ேதோ

முகமதி காண்கி லாதோ தேமரு தெரியல் வீரன்

கண்ணெனத் தெரிந்த செய்ய தாமரை கங்குல் போதும் -

குவிந்தில்ாத் தன்மை என்னோ” (4)