பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 ஆரணிய காண்ட ஆய்வு

இதனாலோ அல்லது அதனாலோ - எதனால் கண்தாமரை இரவிலும் குவியவில்லை என்பதை யாம் அறியேம் - உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் - என்று வினவுவது போலக் கம்பர் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தம்பி கண்:

இராமனின் கண்கள் அவன் தம்பி இலக்குவனின் கண்கள் போலவே இமைக்கவில்லையாம்

"இமைத்தில இராமன் என்னும்

புண்ணியன் கண்ணும் வன்தோள் தம்பிகண் போன்ற அன்றே" (5) இலக்குவன் பதினான்கு ஆண்டு காலமும் தூங்காது கண் விழித்துக் காத்துவந்தான் என்பது ஒரு கருத்து. இங்கே, இலக்குவனின் கண்கள் போலவே இராமனின் கண்களும் இமைக்கவில்லையாம்.

'இமைத்தில’ என்னும் சொல் ஈண்டு கவனிக்கத்தக்கது. துயின்றில (தூங்கவில்லை) என்றோ மூடவில்லை என்றோ சொல்லாமல் இமைத்தில’ எனப்பட்டன. இமைத்தல் என்றால் கண்ணை மூடித்திறத்தல் என்பது பொருள். இமைத்தில என்றால் கண்ணை மூடவே இல்லை என்பது பொருள். இமை கொட்டாமல் பார்த்திருந்தார் என்கிறார் களே அதுதான் இது.

கண் இமைக்கும்போது மூடுதல் என்பது, கண் ஒய்வு எடுத்துக் கொள்வதைக் குறிக்கும். கண் வலிமை குறைந்தவர்கள் அடிக்கடி இமைப்பார்கள் இமைக்காமல் இருக்கமுடியாது. இமைத்தில என்பதற்கு, நீண்ட நேரத்திற்கு ஒருமுறை மூடித் திறக்கிறது-என்று பொருள் கொள்ளலாம். இமைப்பதற்குள் என்ன நேர்ந்துவிடும்ோ என அஞ்சி இலக்குவன் இமைக்காது காத்தான். அதே போல, இப்போது