பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/257

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


------ சுந்தர சண்முகனார் I 255

இராமனும் இமைத்திலனாம். உற்று நோக்கலின் (observation) வன்மை - திண்மையை இது அறிவிக்கிறது. தென்றல் பாம்பு

பிரிந்திருக்கும் இராமனுக்குத் தென்றல் காற்று தவழ்வது, கொல்லும் பாம்பு தவழ்வதுபோல் தோன்று கிறதாம்.

"தண் தமிழ்த் தென்றல் என்னும்

கோளராத் தழுவும் சாரல்’ (6)

என்பது பாடல் பகுதி. கம்பரின் மொழிப் பற்றை நோக்குக. தமிழ்த் தென்றலாம் - தண் தமிழ்த் தென்றலாம். தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்னும் பொருள் உண்மையைத் தமிழ் தழிஇய சாயலவர் (2060) என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் பகுதியாலும் அறியலாம். கோள் அரா = கொல்லும் பாம்பு.

கருமணியில் பாவை

மேலம் ராமன் நாணி வருந்துகிறான் : உலகைக்

@j كمشئ ருந்துகிற காக்கும் அரச குலத்தில் பிறந்த யான், என் மனைவியைக் காக்கும் ஆற்றல் உடையேன் அல்லன்; என் வலிமை நன்று! என நாணிக் கூறுகிறான்:

“நின்று பல் உயிர்காத்தற்கு நேர்ந்த யான் என் துணைக் குலமங்கை ஒர் ஏந்திழை தன் துயர்க் கடல் தீர்க்கும் சதிர்இலேன் நன்று நன்று என்வலி என நர்ணுமால்’ (16) ஏந்திழை = பெண். சதிர் = வல்லமை. நன்று நன்று என்பது எதிர்மறைக் குறிப்பு. ‘என் துணை' என்பது, வள்ளுவர் மனைவிக்குக் கூறிய வாழ்க்கைக் துணை என்னும் பெயரை நினைவூட்டுகிறது.

வள்ளுவரின் படைப்பாகிய காதலன் ஒருவன், தன் கண்ணின் கருமணிப் பாவையை நோக்கிக் கூறுகின்றான்: