பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


256口 ஆரணிய காண்ட ஆய்வு

என் கண்ணின் கருமணிப் பாவையே - பாப்பாவே! என் காதலியை வைத்துக் காப்பதற்கு நீ இருக்கும் இடத்தைத் தவிர வேறு பாதுகாப்பான இடம் கிடைக்கவில்லை; எனவே, நீ உன் இடத்தைக் காலி செய்து விடு - அப்புறம் போய்விடு. அந்த இடத்தில் என் காதலியை வைத்து விழிப்புடன் காக்க வேண்டும் - என்று கூறுகிறான்.

கருமணியிற் பாவாய் நீ போதாய் யாம் விழும்

திருநுதற்கு இல்லை இடம் (1123)

பாவை = பாப்பா போதாய் = போய்விடு. வீழும் = விரும்புகின்ற. திருதுதல் = அழகிய நெற்றியை உடைய பெண் (காதலி).

“அவனா - கண்ணில் இருக்கும் பாப்பாவைக் கூடக் கொண்டு போய் விடுவானே'- என்னும் உலக வழக்கு மொழி, யாராலும் கொண்டு போக முடியாதபடி - கொண்டு போக முடியாத இடத்தில் பாப்பா உள்ளது என்பதை அறிவிக்கும். அந்த இடத்தில் தன் காதலியை வைத்துக் காக்கப் போகின்றானாம்.

நிலைமை இவ்வாறிருக்க, மனைவியைக் காக்க

முடியாமல் இழந்து விட்ட இராமன் வருந்துவதில் வியப்பு இல்லை யன்றோ?

நீள்வதற்கு ஏது

இராமன் சீதையைப் பிரிந்த துயரால் மேலும் இன்னலுற்றுத் திங்கள் முதலியவற்றை நொந்து பலவாறு புலம்பலானான்.

இரவு விரைவில் கழியாமல் நீண்டு கொண்டே போகின்றதாம். அதனால், தம்பியை நோக்கி, இலக்குவா! நீ நாள் தோறும் இரவு முழுதும் கண் விழித்துக் காப்பாயே. இவ்வளவு காலமாய், ஓர் இரவு, இன்றுள்ளது போல் மிகவும்