பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


258 о ஆரணிய காண்ட ஆய்வு

நாடு கடத்தல்

ஞாயிறானவன், தன் குலத்து இராமன் மனைவியை

இராவணன் கடத்தியதால் ஏற்பட்ட பழிக்கு நாணி, நாடு

கடந்தானோ! - என ஐயுறுகிறான் இராமன்.

'நீள் நிலாவின் இசைநிறை தன்குலத்து

ஆணி ஆய பழிவர அன்னது நாணி நாடு கடந்தன னாம் கொலோ சேண் உலாம் தனித் தேரவன் என்னுமால்” (21) நிலாவே நீண்ட நேரமாய் உள்ளது. அதாவது இரவு நீடிக்கிறது. பொழுது விடிந்து ஞாயிறு தோன்ற வில்லை. எனவே, ஞாயிறு நாடு கடந்து விட்டானோ என்கிறான்.

தன் குலம் = ஞாயிறு குலம், இசை நிறை குலம் = புகழ் நிறைந்த குலம். நீள் நிலா = நீண்ட நேரம் உள்ள நிலா. நிலாவின் இசை = நிலாவைப் போன்ற புகழ். புகழ் வெண்ணிறமாகச் சொல்லப்படும் என்னும் விளக்கத்தை வேறு காண்டங்களின் விளக்கத்திலும் காணலாம். நிலா வெண்ணிறமானது - வெண் திங்கள் எனப்படும். நிலாப் போன்ற புகழ் என்பதற்கு, வெண்ணிறமாகக் கற்பனை செய்து கூறப்படும் புகழ் என்பது கருத்து.

ஆணி ஆய பழி = வன்மையான - முதன்மையான பெரிய பழி. ஆணி முத்து என்பது போல் ஆணிப்பழி எனப் பட்டது. ஒருவர் வீட்டுப் பெண்ணை இன்னொருவர் கடத்திச் செல்வது, மிகவும் நாணுதற்கு உரிய பெரும் பழியல்லவா?

சேண் உலாம் தேரவன் = வெகு தொலைவு விரைந்து செல்லக் கூடிய தேரை உடைய ஞாயிறு. அதனால், விரைந்து நாடு கடந்து வெகு தொலைவிற்குச் சென்று விட்டானோ?

பெரும் பழிக்கு ஆளானவர்கள் ஊரை விட்டு ஓடி விடுவதை நேரிலும், நாட்டை விட்டு ஓடி விடுவதை வரலாறு-செய்தித்தாள் வாயிலாகவும் அறிகிறோம். ஈண்டு இது நினைவு கூரத் தக்கது.