பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 ஆரணிய காண்ட ஆய்வு

சிலம்பு என்னும் சொல் ஒரே பொருளில் பின்னால் தொடர்ந்து வந்திருக்கும் இந்த அமைப்பு சொல் பின் வரு நிலை அணி எனப்படும்.

இணைகள்

மயில், மான், யானை ஆகியவை ஆணும் பெண்ணுமாய் இணையாக இயங்குவதை நோக்கிய இராமன் சீதையை எண்ணி வருந்தினானாம்:

“மயிலும் பெடையும் உடன் திரிய,

மானும் கலையும் மருவி வரப் பயிலும் பிடியும் கடகரியும் வருவ

திரிவ பார்க்கின்றான்” (29) கலை = ஆண் மான். பிடி பெண் யானை, கடகரி = மதம் பொழியும் ஆண்யானை. இவ்வாறு பல இலக்கியங் களிலும் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

இவ்வாறு வருந்திய இராமனை இலக்குவன் ஆறுதல் கூறி அமைதி செய்தான். பின்னர் இருவரும், மலை, ஆறு முதலியன தாண்டி, பதினெட்டு யோசனை தொலைவு நடந்து சென்று ஒரு சோலையை அடைந்தனர்.

அறிவிலார் சிங்தை

அப்போது இரவு வந்தது. தெளிந்த அறிவு இல்லாதாரின் உள்ளம்போல், பத்துத் திக்குகளிலும் இருள் பரவியது.

'தெளிந்த அறிவு இல்லவர் சிங்தையின் முக்தி

இருண்டன மாநிலம் எட்டும் இரண்டும்” (36) எட்டுத் திக்குகளோடு மேல் பகுதியும் கீழ்ப் பகுதியு மாகிய இரண்டும் சேரத் திக்குகள் பத்தாம்.

ஞாயிறோ திங்களோ வேறு செயற்கை விளக்குகளோ இல்லாவிடின் இருட்டாய் இருக்கிறது. இதனால், பரந்த