பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 ) ஆரணிய காண்ட ஆய்வு

‘வெய்தாகிய கானிடை மேவருநீர்

ஐது ஆதலினோ அயல் ஒன்றுளதோ நொய்தாய் வரவேகமும் நொய்திலனால் எய்தாது ஒழியான் இது என்னை கொலாம்!" (63)

ஐது = நுண்மையானது - குறைவானது - அரியது. வெப்ப மிகுந்த காடாதலின் தண்ணீர் கிடைக்க வில்லையோ என எண்ணினான். வேறு காரணமோ எனில், அரக்கர் களுடன் போர் புரிகின்றானோ - போரில் இராவணனால் இறந்து விட்டிருப்பானோ என்றெல்லாம் எண்ணத் தோன்றியதில் வியப்பில்லை.

ஒரு வேளை, அவன் சொல்லியும் யான் கேளாமல் மானை தொடர்ந்து சென்றதை எண்ணி வருந்தி உயிர் விட்டிருப்பானோ? (66)

இந்த இருளில் அவன் எனக்குக் கண்ணாய் இருந்தான் இப்போது வேறு கண் இல்லேன்:

'உண்டாகிய கார் இருளோடு ஒருவென்

கண்தான் அயல் வேறொரு கண் இலெனால்” (67)

உலகு கொள்ளாது

பிள்ளைககுப் பிள்ளையாய், பெரியவருக்குப் பெரிய வராய் இருக்கும் இலக்குவா என்னதான் இருப்பினும், நீ என்னை விட்டுப் போயிருக்கும் உன்னை உலகம் ஏற்றுக் கொள்ளாது. தவறு! அந்தோ மிக மிகக் கொடிது என்றான் இராமன்:

“பிள்ளாய் பெரியாய் பிழை செய்தனையால்

கொள்ளாது உலகு உன்னை இது ஒகொடிதே' (68)

இது பாடல். ஈண்டு,