பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 25

தேளும் கோளும்

பின்னர் இராமன் விராதனின் இரண்டு தோள்களையும்

வாளால் வெட்டி விட்டான். மூவரும் மேலிருந்து கீழே

தரைக்கு வந்து விட்டனர். விராதன் வெகுண்டு தேள்

போன்ற தன புருவங்களை நெரித்துக்கொண்டு, ஞாயிற்றையும் திங்களையும் விழுங்க வரும் பாம்புக் கோளைப் போல் (கேது வைப் போல்) இராம

இலக்குமணரை வீழ்த்த ஓடி வந்து நெருங்கினான்.

தோளிரண்டும் வடிவாள் கொடு துணித்து விசையான்

tளி மொய்ம்பினர் குதித்தலும் வெகுண்டு புருவத் தேளிரண்டும் நெரியச் சினவு செங்கண் அரவக் கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும் (42) மீளி மொய்ம்பினர் . இராம இலக்குமணர் = வலிமையர். அரவக் கோள் - பாம்புக் (கேது) கோள். இரண்டு சுடர் = ஞாயிறும் திங்களும்,

புருவத்தைத் தேளாக உருவகித்துள்ளார். புருவத்திற்குப் புருவவில் - வில்புருவம் என்று ஒப்புமை - உருவகம் கூறுவது மரபு. கம்பர் தேளைக் குறிப்பிட்டிருப்பது ஒரு புதுமை. ஆடவன் - அதிலும் அரக்கன் புருவம் தேள் போன்றிருப் பதில் வியப்பில்லை. இப்போது கூட - அரக்கர் அல்லர் - நம் மக்களின் ஆடவர், முகத்தில் என்னென்னவோ செய்து வைத்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.

ஞாயிறு பிடிப்பு (சூரிய கிரகணம்), திங்கள் பிடிப்பு (சந்திர கிரகணம்) ஆகிய காலத்தில் பாம்புக்கோள் ஞாயிற்றையோ - திங்களையோ பிடித்து விழுங்குவதாக எண்ணிக்கொண்டிருந்தது அந்தக் காலம். இதனால், ஞாயிற்றுக்கும் திங்களுக்கும் பாம்புக் கோள் பகை என்பர்.