பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.8 C ஆரணிய காண்ட ஆய்வு

மிக்க துயரத்தை இராமன் அடைந்ததாகக் கம்பர் பல பாடல்களில் விவரித்துள்ளார்.

கண்ணிர் முழுக்கு

இராமன் இலக்குவனைப் பலமுறை தழுவினானாம்;

தன் கண்ணிர்ப் பெருக்கால் அவனது கனக மேனியை முழுக்காட்டினானாம்:

"தழுவினன் பலமுறை தாமரைக் கண்ணின்நீர்

கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை” (85) நடந்ததைக் கூறுமாறு இராமன் வினவினான். அயோமுகி என்னும் அரக்கி தன்னை வளைத்தது, அவளுடைய மூக்கு, காது, முலை ஆகியவற்றை அரிந்தது. முதலாக அனைத்தையும் அறிவித்தனன் இலக்குவன்.

இராமன் தம்பியை மிகவும் பாராட்டி வாழ்த்தினான். இருவரும் பொழுது புலர்தலை எதிர்நோக்கி யிருந்தனர்.

இந்நிலையில் இராமன் சீதையை நினைந்து மிகவும் வருந்தினான். உருவெளித் தோற்றம்

காடு முழுவதும் எங்கு நோக்கினும் எதை நோக்கினும் சீதையின் உருவமே தெரிகிறதாம். இதற்கு உருவெளித் தோற்றம் என்பது பெயர்;

'கானகம் முழுவதும் கண்ணின் நோக்குங்கால்

சானகி உருவெனத் தோன்றும் தன்மையே” (96) பாரதிதாசன் அழகின் சிரிப்பு’ என்னும் நூலில், இயற்கை அழகுக் காட்சி என்னும் பெண்ணாள் எங்கு பார்க்கினும் தெரிந்தாளாம் - என்னும் பொருளில்,

'தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்பட்டாள்”