பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 269

என்று பாடியுள்ளார், நாடும்பொழிலிலும்,ஆடும் புனலிலும், தேடும் பொருளிலும் அவளே காணப்படுகிறாள் என்று காதலன் கூறுவதாகவும் அவர் பாடியுள்ளார்.

“கண்துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ” (98) என்பது பாரதியார் பாடல்.

மேலும் கூறுகிறான்; கனவு கண்டால் கனவில் அவளைக் காணலாம். கண் தூங்கினால் அல்லவா கனவு காண முடியும்?

கொடிய கங்குல்

இரவு விரைவில் விடிய வில்லையே! முடிய வில்லையே! இரவு அவளுடைய கண்களிலும் நீண்டதாய் இருக்கும் போலும் - -

'கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே' (99) பெண்களுக்குக் கண் நீண்டிருப்பது ஒர் அழகாம், காது வரை கண் நீண்டிருப்பதாகக் கம்பராமாயணம் உட்படப் பல இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

சிவன் மனைவியாம் உமாதேவிக்கு ‘விசாலாட்சி’ என்னும் பெயர் ஒன்றுண்டு. கஞ்சி காமாட்சி - காசி விசாலாட்சி மதுரை மீனாட்சி - என அடுக்கிச் சொல்வர். விசால அட்சி = விசாலமான - பரந்த கண் உடையவள் என்பது இதன் பொருள். குறுகிய நோக்கின்றிப் பரந்த நோக்கு - பரந்து விரிந்த அருள்நோக்கு என்னும் பொருளை இப்பெயர் உள்ளடக்கியிருக்கிறது. இதைப் பொதுவாக எல்லாப் பெண்கட்கும் ஏற்றிக் கூறுவது மரபாய் விட்டது.

ஞாயிறு தோற்றம்

தனது (சூரிய) குலத்தவனான இராமன் இரவு நீட்டிப்

பதாக வருந்துகிறானே என்று இரங்கி, நாம் விரைவில்

சென்று இருளைப் போக்கி அவனுக்கு ஆறுதல் உண்டாக்கு