பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


270 to ஆரணிய காண்ட ஆய்வு

வோம் எண்றெண்ணி வந்தவன்போல் கதிரவன் தோன்றி னானாம்:

'இன்னது இன்னது பன்னி ஈடுஅழி

மன்னவர் மன்னவன் மதி மயங்கினான் அன்னது கண்டனன் அல்கினான் எதை துன்னிய செங்கதிர்ச் செல்வன் தோன்றினான்’ (101)

பன்னி = பன்னுதல் = திரும்பத் திரும்பச் சொல்லுதல். பன்னிப் பன்னிப் பேசினான் என்னும் உலகு வழக்கு காண்க, அல்குதல் = கலங்குதல், செங்கதிர்ச்

செல்வன் = ஞாயிறு. -

இயற்கையாக ஞாயிறு தோன்ற, இராமனுக்கு ஆறுதல் உண்டாக்கத் தோன்றியதாகப் புலவர் தம் குறிப்பை ஏற்றிச் சொல்லியுள்ள இந்த அமைப்பு தற்குறிப்பேற்ற அணி' எனப்பெறும். -