பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. கவந்தன் வதைப் படலம்

கவந்தன் என்னும் அரக்கனை வதைத்தது பற்றிய படலம் இது, வேறு ஒலைச் சுவடிகள் சிலவற்றில் கவந்தப் படலம், கவந்தன் படலம், கவந்த வதைப் படலம், கவந்தன் மோட்சப் படலம் என்றெல்லாம் இப்படலத்திற்குப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

கவந்தம் என்பது தலையற்ற உடம்பை - முண்டத்தைக் குறிக்கும். இவனது தலை வெளியில் தெரியாமல் வயிற்றுக் குள்ளேயே இருப்பதால், தலையற்ற முண்டம் போன்ற தோற்றத்தினை உடையவனாயிருந்ததால் இவனுக்குக் கவந்தன் என்னும் பெயர் ஏற்பட்டது.

இவன் ஒரு முனிவரின் சாபத்தால் அரக்க உரு பெற்றானாம். ஒருநாள் இவன் இந்திரனை எதிர்த்தபோது, அவன் இவன் தலையை உள்ளே வயிறு வரை செல்லும்படி அழுத்தி விட்டான். பின், மிகவும் நீளமான இரண்டு கைகளைப் பெற்றானாம். அந்தக் கைகளை விரித்து நீட்டி மடக்கி ஒன்று சேர்க்கும்போது இடையிலே அகப்பட்ட உயிர்களையெல்லாம் தின்று விடுவானாம். இராம இலக்குவர் இவன் இருந்த காட்டையடைந்த போது, அவ்வாறே அவர்களையும் மடக்கி உண்ணத் தொடங்கிய போது, இராமன் இவனுடைய இரண்டு தோள்களையும் வெட்டி விட்டானாம். பின்னர் இந்த உடலால் இறந்த வனாகி, இராமன் கைப்பட்ட புண்ணியத்தால் பழைய உருபெற்று இராமனை வாழ்த்திச் சென்றானாம்.

இருவர் சண்டையிட்டுக் கொள்ளும்போது, ஒருவர் தம்மினும் வலி குறைந்தவரை நோக்கி, தலையில்’