பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 ஆரணிய காண்ட ஆய்வு

அடித்தேனேயானால் தலை வயிற்றுக்குள் போய்விடும்’ என்று சொல்வதுண்டு. அவ்வாறே கவந்தன் நிலை ஆயிற்று.

ஒருவர் மற்றொருவரைக் குறிப்பிட்டு, அவனுக்கு உடம்பெல்லாம் வயிறு - உடம்பெல்லாம் வாய் என்று கேலி பேசுவதுண்டு அவ்வாறே, கவந்தனுக்கு, பற்களோடு கூடிய வாய் வயிற்றில் இருந்ததாம். இது கதைச் சுருக்கம். இனிப் பாடலுக்குள் புகுவாம்:

கவந்தன் வதைப்படலத்தின் முதல் பாட்டிலேயே கம்பர் சக்கைப் போடு போட்டுவிட்டார். அது வருக;

பொறை போற்றல்

பொறுமைக்குப் பேர் போன நிலமே, சீதையின் பொறுமையைக் குறித்து, பொறை என்றால் இது அல்லவா பொறை - பொறை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் - என்று போற்றக் கூடிய அளவு பொறுமையுடைய சீதையை அலைந்து, தேடிக் கிடைக்காமையால் தாங்களும் புலம்புவதுபோல் ஒலி எழுப்பிக் கொண்டு பறவைகள் கூடு களிலிருந்து வெளிப்புறப்பட்டுப் போகும் விடியலில் இராம இலக்குவர் விரைந்து வழி கடந்து கொண்டிருந்தனர்.

'நிலம்பொறை ஈதென நிமிர்ந்த கற்பினாள்

நலம்பொறை கூர்தரு மயிலை நாடிய அலம்புறு பறவையும் அழுவ வாமெனப் புலம்புறு விடியலில் கடிது போயினார்’ (1) கற்பினாள், மயில் = சீதை. நிலமானது சீதையினது பொறுமையைப் போற்றுவதாகச் சொல்வது ஒரு வகைக் கற்பனையான இலக்கிய மரபு.

திருவள்ளுவர் பொறையுடைமை என்னும் தலைப்பின் தொடக்கத்திலேயே, பொறுமைக்கு நிலத்தை உவமையாக்கி,