பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 213

'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல்த் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ (151)

என்று பாடியுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

அடுத்து, - இருள் கழிந்து ஞாயிறு தோன்றத் தொடங்கிய நேரத்தில் பறவைகள் இரைச்சலிட்டுக் கொண்டு கூடுகளிலிருந்து இரை தேட வெளியே புறப்பட்டன; அந்த இரைச்சல், சீதை கிடைக்காமையால் பறவைகளும் அழுது புலம்புவதாகத் தோன்றின எனக் கம்பர் தம் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார். இந்த அமைப்பு தற்குறிப்பேற்ற அணியாகும்.

உயிர்களின் நிலை

இவர்கள் போகும் வழியில் கவந்தன் இருகைகளையும் நீட்டி மடக்கி அகப்படச் செய்த உயிர்கள், திறமை அற்ற அரசனின் நாட்டு மக்கள் படுவது போன்ற துன்பம் எய்தினவாம்.

'மரபுளி நிறுத்திலன் புரக்கும் மாண்பிலன்

உரனிலன் ஒருவன்காட்டு உயிர்கள் போல்வன வெருவுவ சிந்துவ குவிவ விம்மலோடு இரிவன மயங்குவ இயல்பு நோக்கினர்' (4) மரபுளி = முறைப்படி உரன் இலன் = வலிமையற்றவன். முறையுடன் இயங்கிக் காக்க முடியாத வலிமையற்ற வேந்தனின் குடிமக்களின் நிலைமையாவது:வெருவுவ = அஞ்சி நடுங்கும். சிந்துவ = அங்கும் இங்குமாகச் சிதறிப் போகும். குவிவ = பாதுகாப்பான ஓரிடத்தில் வந்து குவிந்துவிடும். விம்மலோடு இரிவன = விம்மி விம்மி நாட்டைவிட்டு ஒடும்.

மயங்குவ = செய்வ தறியாது மயங்கும்.

இவ்வளவும் அந்தக் காலத்தினும் இந்தக் காலத்தில் சில நாடுகளிலும் நடைபெறுகின்றன.