பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


214 ஆரணிய காண்ட ஆய்வு

கவந்தனின் கைகளுக்குள் அகப்பட்ட உயிர்கள் இவ்வாறு துன்புறுவதை இராம இலக்குவர் நோக்கினர்.

கவந்தன் கைக்குள் இராம இலக்குவரும் அகப்பட்டுக் கொண்டனர். இருகைகட்கு இடையிலே ஒரு போர் நடப்பது போன்ற நிலையைக் கண்ட இராமன், அரக்கர் போருக்கு வந்து விட்டனர்; கிட்டத் தட்ட சீதை இருக்கும் இடம் அதாவது இராவணனது ஊர் அண்மையில்தான் இருக்கக் கூடும் என்றான் (8)

அறிவாளி தம்பி

இலக்குவன் இராமன் கூறியதை மறுத்து, இராவணன் முதலிய அரக்கர் போருக்கு வரின், போர் முரசு ஒலிக்கும் - சங்கு ஊதப்படும் ஒன்றும் இல்லையாதலின், இது போர் அன்று; இதில் ஏதோ வேறொன்றுளது என்றான்:

"முற்றிய அரக்கர்தம் முழங்கு தானையேல் எற்றிய முரசொலி ஏங்கும் சங்குஇசை பெற்றில தாதலின் பிறிதொன் றாம்எனாச் சொற்றனன் இளையவன் தொழுதுமுன் கின்றான். (9) இத்தகு செய்கையால் இலக்குவன் பெரிய அறிவாளி யாகக் காணப்படுகின்றான். ஆனால் அண்ணனைத் தொழுகிறான்.

வயிற்றிலே வாய்

கம்பர் சில பாடல்களில் கவந்தனின் தோற்றத்தைக் கட்டுரைத்துக் கற்பனை செய்கிறார்:

'வயிற்றிடை வாய் எனும் மகர வேலை யான்’ (12) என, அவனுக்கு வயிற்றிலே வாய் இருப்பதைச் சுட்டிக்

காட்டியுள்ளார். பெருந் தீனிக்காரனை, 'அவனுக்கு உடம்பெல்லாம் வயிறு - வயிற்றிலே வாய்; அவனுக்குப் பசி