பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 215

எடுத்தால் வயிறு மட்டுமன்றி உடம்பு முழுவதும் சுருங்கி விடும்; அவன் உண்ட பின்பு, வயிறு மட்டுமன்றி உடம்பு முழுவதும் புடைத்துக் கொள்ளும் - என்று கேலியாகச் சொல்வதுண்டு. ஆனால், கவந்தனுக்கோ உண்மையிலேயே வயிற்றில் வாய் இருந்தது. இந்திரன் தலையை அமுக்கத் தலை வயிற்றுக்குள் வந்து விட்டதால் ஏற்பட்ட அமைப்பு

இது.

சாமுவேல் டெய்லர் காலெரிட்ஜ் (Samuel Taylor Coleridge) என்னும் ஆங்கிலப் புலவர் இயற்றிய 'Ancient Mariner’ என்னும் மிகவும் நீளமான பாடல் பகுதி ஒன்று இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. அதாவது:- -

மீகாமன் (கப்பல் ஒட்டி) ஒருவன் கடலில் வெகு தொலைவிற்கு அப்பால் கப்பலை ஒட்டிச் சென்று விட்டான். விரைவில் மீளும் வாய்ப்பு இல்லை. உணவும் தண்ணிரும் தீர்ந்து விட்டன. தாங்கக் கூடிய நாள்கட்கு மேல் நாள்கள் ஒடி விட்டன. நீர் வேட்கை நாக்கைப் பின்னியது. பார்க்கும் இடம்ெல்லாம் உப்புத் தண்ணீர் தெரிகிறது. ஆனால் பருக ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லை. அப்போது எதிர்பாரா விதமாய்த் திடீரென மழை கொட்டிற்று. அவன் மழையில் நனைந்தபடி நின்றான். உதடு (வாய்) நீர் பருகியதன்றி அவனது உடல் முழுவதும் நீர் பருகியதாம். அப்படி யென்றால், அவனது உடல் முழுவதிலும் உள்ள மயிர்க்கால் துளைகளெல்லாம் வாயாக அமைந்து நீர் உறிஞ்சின என்பது கருத்து. இந்தக் கருத்து அமைந்த அந்தப் பாடல் பகுதி வருமாறு:

“Water water, every where,

And all the boards did shrink Water water, every where, Nor any droh to drink.