பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


276自 ஆரணிய காண்ட ஆய்வு

“The silly buckets on the deck, That had so long remained, I dreamt that they were filled with dew; And I awoke, it rained My lips were wet, my throat was cold My garments all were dank; Sure I had drunken in my dreams, And all my body drank”

என்பது அந்தப் பாடல் பகுதி. இது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. கவந்தனுக்கு வயிற்றிலே வாய் என்றால், அந்த மீகாமனுக்கு உடல் முழுதும் அதாவது மயிர்க்கால்களில் எல்லாம் வாய் இருந்த தாம் - என்பதாகக் கருத்து கொள்ளக் கிடக்கிறது. .

பூதமும் பாதகமும்

விண், காற்று. தி, நீர், மண் என்னும் ஐம்பூதங்களால் ஆனது உடம்பு என்பர். இதை, ஐம்பூதத் திரியாக்க உடம்பு எனத் தமிழிலும், பஞ்ச பூதப் பரிணாம சரீரம் எனச் சமசுகிருதத்திலும் சொல்லுவர்:

விண்: உடம்புக் குள்ளே காற்று போகும் வெற்றிடம் உள்ளது - அது விண். -

காற்று முக்கு வழியாகக் காற்றை உள்ளே இழுத்தும் வெளியே விட்டும் உயிர்ப்பு நடைபெறுகிறது . இது காற்று.

தீ உணவை எரித்து விடுகிறது; மேலே போட்ட ஈரத் துணி உலர்ந்து விடுகிறது. அமர்ந்த இடமும் உறங்கிய இடமும் கொதிக்கின்றன - இது தி.

நீர் உடம்பில் நீர் உள்ளது; வாயில் நீர் சுரக்கிறது -

இது நீர்.