பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஆரணிய காண்ட ஆய்வு

குற்றாலக்குறவஞ்சி என்னும் நூலில், கதைத் தலைவி யாகிய வசந்த வல்லி, தன்னைச் சுட்டு வருத்தும் திங்களை நோக்கிக் கூறுவதாகச் சுவையான செய்தி ஒன்றுள்ளது.

திங்களே! என் தலை முடியையும் அதன் பின்னே தொங்கும் பின்னலையும் (சடையையும்) பார்த்து உன் பகையாகிய பாம்பை நான் வைத்திருப்பதாக எண்ணி என்னைச் சுடுகின்றாயா? அல்லது என் முகமதியை அந்தப் பாம்பு விழுங்கப் பார்க்கிறது என்று எண்ணி அந்தப் பாம்பைச் சுடுகின்றாயா? ஐயோ, ஒன்றும் புரியவில்லையே! இது பாம்பு அன்று பின்னல் சடை - இனிமேலாயினும் தலைவனை அடைய முடியாத என்னைச் சுடுவதை நிறுத்துவாயாக;

நாகம் என்றே எண்ண வேண்டாம் வெண்ணிலாவே இது

வாகு குழல் பின்னல் கண்டாய் வெண்ணிலாவே'

என்பது பாடல் பகுதி.

இவ்வாறு எண்ணும் மரபை ஒட்டி, அரவக்கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும் என்று பாடியுள்ளார் கம்பர்.

தங்களை நோக்கி வந்த விராதனை இராமன் எட்டி உதைத்து ஒரு குழியில் தள்ளினான். உடனே விராதன் அரக்க உரு நீங்கித் தெய்வ வடிவுடன் தோன்றினான்; இராமனைப் பலவாறு புகழ்ந்து போற்றினான். அவற்றுள் ஒன்று வருமாறு:

தாயும் கன்றும்

வாராது வந்தவனே! தாயை அறியாத கன்றோ -

கன்றை அறியாத தாயோ இல்லை என்பர். ஆனால், தாயாகிய நீ, கன்றுகளாகிய எல்லா உயிர்களையும் பற்றி