பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 0. ஆரணிய காண்ட ஆய்வு

நீர் மண் இவை முதலிய ஐம்பெரும் பூதங்கள். ஐந்து பெரும் தீமைகளும் திரண்ட உடம்போடு உயிர் பெற்றிருப்ப வனாம் கவந்தன்.

செவியும் வயிறும்

திங்களையும், ஞ்ாயிறையும் கிரகண காலத்தில் விழுங்கும் இராகு, கேது என்னும் பாம்புகள், வேலை இல்லாத போது வந்து தூங்கி ஒய்வெடுத்தற்கு உரிய அளவு பெரிய தொளை பொருந்திய காதுகளை உடையவனாம் அவன். மேலும், பொய்ம்மை உடைய கீழ் மக்கள் சென்று புகும் நரகத்தையும் ஏளனம் செய்து சிரிக்கும் வயிறு உடையவனாம்:

வெய்யவெங் கதிர்களை விழுங்கும் வெவ்அராச்

செய்தொழில் இலதுயில் செவியின் தொள்ளையான் பொய்கிளர் வன்மையில் பிரியும் புன்மையோர் வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான்’ (17)

வெய்ய வெங் கதிர்கள் என்பதை, வெய்ய கதிர், வெம்கதிர் எனப் பாகுபாடு செய்து கொள்ளல் வேண்டும்.

வெய்ய கதிர் = விரும்பத் தக்க கதிர் . இது திங்கள். வெம் கதிர் = வெப்பமான கதிர் - இது ஞாயிறு.

இவற்றை விழுங்கும் இராகுவும் கேதுவும், வேலை யில்லாத நேரத்தில், கவந்தனின் வலக்காதில் ஒன்றும் இடக் காதில் ஒன்றுமாகப் படுத்துத் தூங்குமாம். கவந்தன் காதுகள் 'தூங்குமூஞ்சி மடம்' போல அவ்வளவு பெரிய தொளைகளை உடையனவாம். இது இலக்கியக் கற்பனையே.

கலிங்கத்துப் பரணி என்னும் நூலிலும் இவ்வாறே பேய்களின் காதுகள் பெரியன எனக் கற்பனை செய்யப்பட் டுள்ளது:

பேய்களின் உடலிலே பாம்புகள் தொங்குவது போல் பருத்த மயிர்கள் தொங்குகின்றனவாம். மூக்குத் தொளைகள்