பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


280 0 ஆரணிய காண்ட ஆய்வு

யாவேன் - நீ தப்பிப் போ என்கிறான். இலக்குவன் தான் இரையாவதாகச் சொல்கிறான். பின்னர் இருவரும் ஒருவாறு துணிந்து அவன் அருகில் செல்ல அவன் அவர்களை விழுங்க முயன்றான். உடனே இருதோள்களையும் இராமன் வாளால் வெட்டி வீழ்த்தினான்.

உடனே கவந்தன் தனது பழைய உரு பெற்றான். தான் தனு என்பவனின் மகன்; ஒரு முனிவரின் வைவால் அரக்க உரு பெற்றேன்; இந்திரனை எதிர்த்ததால் தலையை வயிற்றுக்குள் அவன் அழுத்திவிட்டான். இராமர் கை பட்டதும் விடுதலை கிடைக்கும் என்றான்; அவ்வாறே இன்று பெற்றேன் - என்று கூறி, திருமாலின் பிறவியே இராமன் என்பதையறிந்து பலவாறு தொழுது புகழ்ந்து போற்றினான்.

பின்னர், அவன், இருவரையும் நோக்கி, நீவிர் சபரி என்பவரை அடைந்தால் அ வ ர் வழி காட்டுவார்; சுக்கிரீவனைத் துணையாகக் கொண்டால் அரக்கரோடு போரிட்டுச் சீதையை மீட்கலாம் என்று கூறி வணங்கி விண்வழியே சென்று விட்டான்.

பின்னர் இராம இலக்குவர் காடு மலைகளை யெல்லாம்

கடந்து வெகு தொலைவு சென்று மதங்க முனிவருடைய தவக்குடிலை அடைந்தனர். பொழுதும் போயிற்று.