பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D ஆரணிய காண்ட ஆய்வு

"கண்ணிய தருதற்கு ஒத்த

கற்பகத் தருவும் என்ன

உண்ணிய நல்கும் செல்வம்

உறுநறுஞ் சோலை, ஞாலம்

எண்ணிய இன்பம் அன்றித்

துன்பங்கள் இல்லை யான

புண்ணியம் புரிந்தோர் வைகும்

துறக்கமே போன்றதன்றே" (1)

கண்ணிய = எண்ணிய பொருள்கள். உண்ணிய = உண்ணுதற்கு உரிய பொருள்கள் - கனி, கிழங்கு முதலியன. துறக்கம் = சுவர்க்கம். இன்பத்தைத் தவிரத் துன்பம் என்பதே இல்லாததாம் துறக்கம். இது சோலைக்கு உவமை.

தீது இல்லையே!

அத்தகைய இடத்தில், நீண்ட நாளாகத் தன்னையே எண்ணி நோற்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சபரி என்னும் பெண்ணைக் கண்டு, தீது இன்றி நலமாக இருக்கின்றாயா என்று இன்சொல்லால் வினவினான் இராமன்: -

'அன்னதாம் இருக்கை கண்ணி - ஆண்டுகின்று அளவு இல்காலம்

தன்னையே கினைந்து நோற்கும்

சவரியைத் தலைப்பட்டு அன்னாட்கு இன்னுரை அருளித் தீதுஇன்று

இருந்தனை போலும் என்றான்' (2) நலமாயிருக்கிறாயா என்று கேட்பதற்குப் பதில் - அதே பொருளில் - தீமை எதுவும் இன்றி இருக்கின்றாயா - என நலம் உசாவுவதாக எழுதுவது கம்பரது கவிமரபு.

கேகய நாட்டில் இருந்த பரதன், அயோத்தியிலிருந்து வந்து தூதரை நோக்கி, தந்தை நலமாயுள்ளாரா என்று