பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ) 283

கேளாமல், தீது இலன்கொல் திருமுடியோன்” என்று வினவியதாகவே கம்பர் பாடியுள்ளார்.

இதை ஒட்டினாற்போல் மற்றோர் இடம் உள்ளது. இராம இலக்குவர் தயரதனின் மக்கள் என்பதை அறிந்த சடாயு "வேந்தர் வேந்தன் தன் தோள் இணை வலியவோ' அதாவது மன்னனின் தோள்கள் இரண்டும் வலிமையுடன் உள்ளனவா? என்று வினவினான். கம்பரின் நலம் உசாவல் இத்தகையது.

தந்தையும் தாயும்

சபரி விருந்தளித்து இராமனிடம் சொல்கிறாள். என் தந்தையே! நீ இங்கு வருவாயென முன்னமேயே அறிவேன். என் தவம் இன்றுதான் நிறைவேறியது என்றாள். இராமன் அவளை நோக்கி, தாயே! எங்கள் களைப்புத் துயரத்தை உணவளித்துப் போக்கினாய். நீ வாழ்க! என்றான்.

எஇருந்தனென் எந்தை நீ ஈண்டு

எய்துதி என்னும் தன்மை பொருந்திட இன்றுதான் என்

புண்ணியம் பூத்தது என்ற அருந்தவத்து அரசி தன்னை

அன்புற நோக்க்கி எங்கள் வருந்துறு துயரம் தீர்த்தாய்

அம்மனை! வாழி என்றான். (5) எந்தை = என் தந்தையே! அம்மனை = என் தாயே! சபரி இராமனைத் தந்தையே என்றதும், இராமன் சபரியைத் தாயே என்றதும், வியப்பும் அன்பும் கலந்த விளிகளாகும்.

இத்தகைய விளிகளைப் பெரிய புராணத்தில் காணலாம். காரைக்காலம்மையார் சிவன் வைகும் வெள்ளி மலைக்குச் சென்றபோது, சிவன், காரைக்கால் அம்மையாரை நோக்கித்