பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 ) ஆரணிய காண்ட ஆய்வு

தாயே என்ற பொருளில் அம்மையே வருக என்றாராம். சிவன் அம்மையே என்று அழைக்க, காரைக்காலம்மையார் சிவனை அப்பா என அழைத்தாராம். இதனைப் பெரிய புராணம் - காரைக்காலம்மையார் என்னும் பகுதியில் படித்தறியலாம். வருக;

'அருகுவந்து அணைய நோக்கி

'அம்மையே என்னும் செம்மை ஒருமொழி உலக மெல்லாம்

உய்யவே அருளிச் செய்தார்" (58) "அங்கணன் அம்மையே என்றருள் செய, "அப்பா' என்று

பங்கயச் செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்

- தெழுந்தார்" (59) என்பன பாடல்கள். இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் ஈண்டு இது எடுத்துக்காட்டப் பெற்றது.

இங்கே இராமன் - அங்கே சிவன். இங்கே சபரி - அங்கே காரைக்காலம்மையார்.

சபரி, சுக்கிரீவன் இருந்த உருசிய மலைக்குச் செல்லக் கூடிய வழியினைத் தெளிவாக இராமனிடம் தெரிவித்தாள்.

தோட்ட செவி

கேள்வியால் துளைக்கப்பட்ட செவிகளையுடைய நல்லறிஞர்கள் தங்கள் மெய்யுணர்வினால் நுகரத் தக்க அமிழ்தத்தின் சுவையாக (சுவைபோல்) அமைந்துள்ள இராமன், வீடுபேறு அடைவதற்கு உரிய அறநெறி முறையை வெளிப்படையாக அறிவிக்கும் அறிஞர்கள் போல் சபரி காட்டிய வழித் தடங்களை யெல்லாம் கேட்டுப் புரிந்து கொண்டான்.