பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 o ஆரணிய காண்ட ஆய்வு

வைணவப் பெரியார் இராமாநுசர், தம் ஆசானாகிய திருக்கோட்டியூர் நம்பியிடம் திருமந்திரங்கள் பற்றி மெய்யறிவுரை (உபதேசம்) கேட்டார். ஆசான் இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்றாராம் ஆனால், இராமாநுசர் மாறாக அனைவருக்கும் மறைவின்றி வெளிப்படையாய்த் தெரிவித்தாராம் - கோபுரத்தின்மேல் ஏறிநின்று கூவியுரைத்தார் என்று கூடச் சொல்வார்கள்.

இக்காலத்திலும், மந்திர உபதேசம் என்னும் பெயரில் சொல்லப் படுவதை மறைவாகவே வைத்திருக்க வேண்டும் என்கின்றனர். இவர்களைப்போல் இன்றி, வெளியிற்றாகக் காட்டுறும் அறிஞர்' என்றார் கம்பர்.

புண்ணியம் உருகல் . பின்னர்ச் சபரி, தான் இயற்றிய தவயோகப் பயனால் வீடு பேறடைந்தாள்.

இராம இலக்குவர் சபரி அறிவித்த வழியாகச் சென்று கர்டு மலை ஆறுகளை யெல்லாம் கடந்து பம்பைப் பொய்கைப் பக்கம் சென்றடைந்தனர்.

அப்பொய்கையில் நாள்தோறும் எண்ணற்ற மக்கள் நீராடுகின்றனர். நீராடும் மக்களின் தீவினைகள் நீராடியதும் அவர்களை விட்டு அகல்கின்றன. தீவினைகளின் வெப்பம் கடுவதினாலே, புண்ணியம் உருகி நீரானது போல் பொய்கை தோன்றிற்றாம். . . "தண்ணெனும் கானும் குன்றும்

நதிகளும் தவிரப் போனார் மண்ணிடை வைகல் தோறும்

வரம்பிலா மாக்கள் ஆடக் கண்ணிய வினைகள் என்னும்

கட்டழல் கதுவலாலே புண்ணியம் உருகிற் றன்ன

பம்பையாம் பொய்கை புக்கார்’ (9)