பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 287

தவிரப் போனார் = கடந்து சென்றார். தூய தெய்வத் தன்மையுடைய நீர் நிலைகளிலோ ஆற்றிலோ முழுகினால் தீவினை போக நல்லறம் சேரும். சிறப்புக் காலத்தில் கடலிலும் மூழ்குவர். இதனை,

"கடலிலும் மூழ்குவர் காலம் ஒன்றினே (துதிகதி-12) என்னும் பிரபு லிங்க லீலைப் பாடல் பகுதியால் அறியலாம். இங்கே, பட்டினப் பாலையில் உள்ள'தீது நீங்கக் கடலாடியும்

மாசு போகப் புனல் படிந்தும்' (99, 100) என்னும் பாடல் பகுதியாலும், ஞான சம்பந்தர் தேவாரத்தில் காவிரியைப் பற்றி உள்ள. -

'பாவம் தீர் புனல் பாற்றுறை" 'ஆடுவோர் பாவம் தீர்த்து திகழுமா காவிரி

நதிப்படிய கின்று பழிதீர நல்கும் கோகரணம்” என்னும் பகுதிகளாலும் இன்ன பிற வற்றாலும் அறியலாம்.

நீராடுவோரின் பாவங்களாகிய நெருப்பு அவரை விட்டு நீங்கவே, அந்த அனலால், புண் ணியம் என்னும் பொன் உருகி நீர்த்து இருந்தாற் போல் பொய்கை நீர் இருந்ததாம்.

இத்தகைய நீரைப் புண்ணிய நீர், புண்ணியத்துறை என்பர்,

'தண்ணருங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்

புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி மண்ணகம் மருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி

(5: 165 – 168)

~പ என்னும் சிலப்பதிகாரப் பாடல் பகுதியிலும், புறப் பொருள்

2 3

வெண்பா மாலையில் உள்ள