பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288ü ஆரணிய 676ಳr- ஆய்வு

'புண்ணிய நீரில் புரையோர் ஏத்த

மண்ணிய வாளின் மறம்கிளர்ந் தன்று” (6: 27)

என்னும் பாடலிலும் புண்ணிய நீர் எனப்பட்டுள்ளது.

கம்ப ராமாயணத்திலேயே, கைகேயி இராமனைக் காட்டிற்குச் செல்லுமாறு பணிக்கும் பாடலில்,

'பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி

ஏழிரண் டாண்டின் வாவென்று இயம்பினான் அரசன் என்றாள்' எனப் புண்ணியத்துறை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இத்தகைய புண்ணியப் பொய்கைப் பகுதியை இராமரும் இலக்குமணரும் அடைந்தனர்.