பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரணிய காண்ட ஆய்வு

இரவிலும் மலர்ந்துள்ள தாமரை இல்லை; எனவே, இல்லாத பொருளை உவமித்தமையின் இந்த அமைப்பு

'இல் பொருள் உவமை அணி” எனப்படும். வடமொழியில் அபூத உவமை என்பர் இதனை.

இந்திரனுக்குக் கண் ஆயிரம் இருப்பதால், அவன் பெயராக மக்கள் கண்ணாயிரம் எனப் பெயர் வைத்துக் கொள்வது உண்டு.

அழகுப் பரிமாற்றம்

இந்திரன் உடலில் அணிகலன்கள் அணிந்துள்ளான். அணிகலன்களின் ஒளி அவன் உடலில் பட்டுச் சுடர் வீசுகிறதாம். அதே நேரத்தில், அவனது உடலின் மின்னல் போன்ற ஒளி அணிகலன்களுக்கு மேலும் ஒளி தருகின்றதாம்:

“... ... ... அணி பூண் ஒளிமேல்

மின்னின் செறி கற்றை விரிந்தன போல் பின்னிச் சுடரும் பிறழ்பேர் ஒளியான் (3)

என்பது பாடல் பகுதி.

உலகில் சிலர் அணிகலன் அணிந்து கொள்ளின் மிகவும் அழகா யிருப்பர். இவர்களால் அணிகலன்கள் பெருமை பெறுகின்றன. சிலர் அணிகள் அணிந்தாலும் அவ்வளவாக எடுப்பா யிருப்பதில்லை. இவர்களால் அணிகலன்கள்

பெருமை இழக்கின்றன.

அணிகலன் அணியாமலேயே இயற்கையாய் அழகாய் இருப்பவர்கள் அணிகலன் அணிந்து கொண்டால் மேலும் அழகாய் இருப்பர். இங்கே, அணிகலனும் அணிபவர்களும் அழகுப் பரிமாற்றம் செய்து கொள்வதைக் காணலாம். இந்திரனது நிலை இதுதான்.