பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 ஆரணிய காண்ட ஆய்வு

'சிறு காலையிலா நிலையோ திரியா குறுகா நெடுகா குணம் வேறுபடா உறுகால் கிளர் பூதமெலாம் உகினும் மறுகா நெறி எய்துவென் வானுடையாய் (20)

வான் உடையாய் = வானுலகின் தலைவனாகிய இந்திரனே! மறுகா நெறி என்பது உயரிய வீடு பேறே. இப்பாடலால், நான்முகன் உலகத்து இன்பம் சிறிது காலமே கிடைக்கும் - அவ்வப்போது மாறுபடும் - நிலைமை வேறு படும் - ஒரு காலத்தில் அழியும் - என்னும் செய்தி அறியப் படும். (இந்தக் கால அமைச்சரவை போல).

மற்றும், வீடுபேற் றுலக இன்பம், என்றும் அழியாதது - மிகுதலோ குறைதலோ இல்லாமல் என்றும் ஒரே தன்மைத்து உயர்தரத்தினின்றும் வேறுபடாதது - எது அழியினும் தான் அழியாதது - என்னும் செய்தியும் இப் பாடலால் தெரியவரும்.

ஆன் ஏறும் அரி ஏறும்:

இவ்வாறு இவர்கள் இருவரும் உரையாடிக் கொண் டிருந்த போது, குடிலின் வெளியில் இந்திரனது ஐராவதம் என்னும் யானை நின்றிருந்ததைப் பார்த்த இராமன் உள்ளே இந்திரன் உள்ளான் என்பதை உய்த்துணர்ந்து கொண்டான்.

உலகியலிலும், ஒருவரின் ஊர்தியைக் கொண்டு இன்னார் உள்ளே போயிருக்கிறார் என வெளியில் இருப்பவர்கள் பேசிக் கொள்வது உண்டல்லவா?

பின்னர் இராமன் சீதையையும் இலக்குவனையும் சோலையின் புறத்தே இருக்கச் செய்து தான் மட்டும் தனியாக ஆன் ஏறு போலவும், அரி ஏறு போலவும் பொழிலினுள் புகுந்து சரயங்கரின் குடிலை நோக்கிச் சென்றான்.