பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 CI ஆரணிய காண்ட ஆய்வு

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில், இழிவு, இழப்பு, செய்வதறியாத சோர்வு நிலைமை, வறுமை என்னும் நான்கின் காரணமாக அழுகை வரும் என்று கூறியுள்ளார்.

"இழிவே இழவே அசைவே வறுமையென

விளிவில் கொள்கை அழுகை நான்கே' (5) என்பது நூற்பா. செயிற்றியனார் தம்பெயர் கொண்ட செயிற்றியம் என்னும் நூலில், அழுகையின் காரணமாகப்

பல கூறியுள்ளார் அவையாவன:

'கவலை கூர்ந்த கருணையது பெயரே அவலம் என்ப அறிந்தோர் அதுதான் கிலைமை இழந்து நீங்கு துணை உடைமை தலைமை சான்ற தன்நிலை அழிதல் சிறையணி துயரமொடு செய்கையற்றிருத்தல் குறைபடு பொருளொடு குறைபாடு எய்தல் சாபம் எய்தல் சார்பிழைத்துக் கலங்கல் காவல் இன்றிக் கலக்கமொடு திரிதல் கடகம் தொட்டகை கயிற்றொடு கோடல் முடியுடைச் சென்னி பிறர் அடியுறப் பணிதல் உளைப்பரி பெருங்களிறு ஊர்ந்த சேவடி தளைத்து இளைத்து ஒலிப்பத் தளர்ந்தவை நிறங்கிளர் அகல நீறொடு சேர்த்தல் மறங்கிளர் கயவர் மனந்தவப் படைத்தல் கொலைக் களம் கோட்டம் கோல் முனைக் கவற்சி அலைககண மாறா அழுகுரல் அரவம் இன்னோர் அன்னவை இயற்பட நாடித் துன்னினர் உணர்க துணிவறிந் தோரே இதன்பயம் இவ்வழி நோக்கி அசைந்தன ராகி அழுதல் என்ப"