பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 0 ஆரணிய காண்ட ஆய்வு

என்பது பாடல் பகுதி, கம்பர் இராமனை வரி சிலை உழவன்' என்றார். சிவப்பிரகாசர் அதே இராமனைக் குறிப்பிட்டு நெடிய சிலை இராமன் அனைய விறல்வேந்தர் வில்போர் புரிவர் என்று கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

முனிவன் பதில்

ஐயனே! ஆயிரக்கணக்கான தவம் புரிந்துள்ளேன். நீ இங்கே வருவாய் என்ற எண்ணம் உண்டு. என் இரு வினைகளும் தீர்ந்தன. இனி எனக்கு எந்த ஒரு வினையும் இல்லை:

"ஆமிரம் முகமுள தவம் அயர்குவென் யான்

நீயிவன் வருதிகொல் எனும் நிலை உடையேன் போயின. இருவினை புகலுறு விதியால் மேயினை இனிஒரு வினை இலை விறலோய்” (30) ஆயிரம் முகம் உளதவம் = ஆயிரம் விதமான தவம் - பல வகையான தவங்கள். அவற்றுள் சில: நீருக்குள் இருத்தல், நெருப்பிடையே வேகாது இருத்தல், ஒற்றைக் காலில் நிற்றல், புற்றுமாய் மரமுமாய் உற்றிருத்தல், காட்டில் திரிந்திருத்தல், காற்றை மட்டும் புசித்திருத்தல், தாமரை இலையும் தண்ணிரும் போலவும் புளியம்பழமும் மேலோடும் போலவும் உலகோடு ஒட்டியும் ஒட்டாதும் இருத்தல் - முதலியனவாய் இருக்கும் தவங்கள்.

இராமனது வருகையால் நல்வினை, தீவினை என்னும் இரு வினைகளும் போயின வாம். இங்கே,

'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (5) என்னும் குறள் எண்ணத் தக்கது.

முனிவன் மேலும் கூறினான். பிரமன் தன் இருப்பிடம் அழைத்து வர இந்திரனை அனுப்பினான். நான் என்றும்