பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் ) 41

நிலையான வீடு பேற்றை விரும்பினேன். எனவே யான் என் மனைவியுடன் தீக்குளிப்பேன் - விடை தருக - எனக் கூறி, மனைவியுடன் தீக்குளித்து இனிப் பிறப்பு இல்லாத வீடு பேற்றை அடைந்தனன். அதின் உயர்வுக் கோட்பாடு

சரபங்கன் பெற்ற பேறு மிகவும் உயர்ந்தது எனக் கம்பர் சிறப்பிக்கிறார். மாப்பேர் உலகம் முழுவதையும் யாரும் அறிய முடியாத வகையில் தன்னுள் உண்டவனாகிய திருமாலின் தெய்வப் பிறவியாம் இராமனின் பெயரை உணர்ந்து உள்ளத்தில் நினைப்பவர்கள் பெரும் பேறு மிக உயர்ந்தது எனில், அப்பெயரை ஒலித்து உரு ஏற்றுபவர்கள் பெரும் பேறு அதனின் உயர்ந்தது; அங்கனமெனில், அந்த இராமனையே உயரிய நிலையில் நேரில் கண்டு போற்றிய வர்களின் பெரும் பேற்றைச் சொல்லுதல் எளிதோ? 'அண்டமும் அகிலமும் அறிவரு நெறியால் உண்டவன் ஒருபெயர் உணர்குநர் உறுபேறு எண்தவ நெடிது எனில் இறுதியில் அவனைக் கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ' (44) உண்டவன் - திருமால்-இராமன், பெயர் உணர்குநர் = பெயரைத் தியானிப்பவர் - சொல்லி உரு ஏற்றுபவர். எண் = அளவில்; தவ நெடிது = மிகவும் உயர்ந்தது. கண்டவரின் பேற்றைச் சொல்லுதல் எளிதில்லை என்றால், நம்மால் அந்தப் பெரிய பேற்றைச் சொல்லி முடியாது - என்பதாம்.

இந்தப் பாடல் கை முதிக நியாயம் அமைந்த பாடலாகும். அதுவே அப்படியெனில், மற்றவை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ-சொல்லி முடியுமோ என்பதாகக் கூறுவதற்குக் கை முதிக நியாயம் என வடமொழியில் பெயராகும். பெயரை எண்ணுகிற அதனினும் சொல்லி உருவேற்றுவது உயர்வு - அதனினும் நேரில் கண்டு அருள்