பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 ம ஆரணிய காண்ட ஆய்வு

முனிவர்கள் இராமன் மு. த லி ய மூவரையும் வரவேற்றனர். இராமன் ஒவ்வொரு முனிவரையும் தொழுந்தோறும் இராமனுக்கு வாழ்த்து கூறினர். பின், உணவு தந்து ஓம்பித் தங்குவதற்கு ஒரு குடிலும் ஏற்பாடு செய்து தந்தனர்.

அமைச்சர்களை அழைத்து வரவேற்று உடனே தேவை மடலைத் தருவது போல், இராமனைக் கண்டவுடனேயே தங்கள் குறைகளைக் கூறக்கூடாது என எண்ணிய முனிவர்கள், சில நாள் சென்றதும், பலராகக் கூடி இராமன் பால் வந்தனர்.

வந்த முனிவர்களை இராமன் வணங்கி மகிழ்ந்து நீங்கள் புரிய இருக்கும் அருள்' என்ன என்று வினவினான். உடனே முனிவர்கள், உலகம் காத்த மன்னவனின் மைந்தனே! எங்கள்பால் மிகவும் கொடுஞ்செயல் புரிந்துள்ளனர் அரக்கர்; அதன் விளைவைக் கேள்’ எனச் சொல்ல லாயினர்: -

"எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்துவந்து

ஐயனும் இருந்தனன், அருள் என் என்றலும் வையகம் காவலன் மைந்த வந்ததோர் வெய்ய வெங்கொடுங் தொழில் விளைவுகேள் எனா'

(11) ஐயன் = இராமன். வையகம் காவலன் தயரதன். தங்கட்கு விளைவிக்கப்பட்டிருப்பது கொடுந்தொழிலாம் - வெங் கொடுந் தொழிலாம் - வெய்ய்வெங் கொடுந்தொழி லாம் - அதாவது, மிகமிகக் கொடிய ஊறு விளைக்கும் செயல் என்பது கருத்து.

ஒருவரிடம் உதவிக்குச் செல்பவர்கள், அவருடைய அப்பன் - பாட்டன் செய்த உதவிகளைக் குறிப்பிட்டு,