பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 41

அவர்களைப் போலவே நீங்களும் உதவி செய்ய வேண்டும் என்று கூறிக் குளிப்பாட்டி உதவி பெற்றுப்போவது உண்டு.

(எனது சொந்தப் பட்டறிவு (அனுபவம்) ஒன்றைக் கூறுகிறேன். என் மைத்துனர் மகனுக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுத்தேன். ஒருமுறை என் மகள் ஊருக்குச் சென்ற போது, அவ்வூர்த் தொழிலாளர் இருவர் என்னிடம் வந்து, உங்கள் மாமனார் அவ்வளவு தருவார் - உங்கள் மைத்துனர் இவ்வளவு கொடுப்பார் - உங்கள் மருமகன் எவ்வளவோ உதவுவார் என்று என்னிடம் வேப்பிலை அடித்தனர். ம ட் ட மா க எண்ணிவிடப் போகிறார்கள் என்று யான் நினைத்து ஆளுக்கு ஐந்து உரூபா கொடுத்தேன். அவர்கள் வாங்கிக் கொண்டு போய்க் கள்ளுக்கடையில் கொடுத்துவிட்டார்கள். நான் ஏமாந்து கொடுத்து விட்டதாகச் சிலர் என்னைக் கிண்டல் செய்தனர்.)

இந்த முறையிலே - ஆனால் உயர்ந்த முறையிலே முனிவர்கள் வையகம் காவலன் மைந்த' என்று இராமனை விளித்துள்ளனர்.

இராமன் முனிவர்களை நோக்கி, நீங்கள் என்பால் செய்யும் அருள்” என்ன என்று கேட்டது மிகச்சிறந்த பண்பாட்டின் உயர் எல்லையாகும். அதாவது, இராமன் அவர்களைத் தனக்கு அருள் (உதவி) செய்யும்படிக் கேட்க வில்லை - அவர்கள் தன்னிடம் என்ன உதவி எதிர் பார்க்கின்றனர் என்பதையே அவ்வாறு சொல்லிக்கேட்டான். முனிவர்கள் தன்னிடம் ஓர் உதவி கேட்பதை - அந்த உதவியைத் தான் செய்யப்போவதை, அவர்கள் தனக்குச் செய்யும் உதவியாகக் கருதி இவ்வாறு வினவினான்.