பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 ம் ஆரணிய காண்ட ஆய்வு

தம்மிடம் உள்ளதைக் கனவிலும் மறைத்தலை அறியாமல் கொடுக்கக் கூடியவர்களிடத்தில் ஒருவர் போய் ஒரு பொருள் தரும்படி இரத்தலும், அவர்கட்கு ஒன்று ஈவது போன்றதே யாகும் என்னும் கருத்தமைந்த

"இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு’ (1054) என்னும் சுவைமிக்க குறள் ஈண்டு ஒப்பு நோக்கி மகிழ்தற்கு உரியதாகும். இரப்பவர்க்குக் கொடுப்பதால், கொடுப் பவர்க்குப் புகழும் நற்பேறும் கிடைப்பதால் இரத்தலும் ஈதலே போலும் என்று உயர்த்தப்பட்டது.

அந்தணர் யார்?

முனிவர்கள் இராமனிடம் தங்கள் துயர்களைக் கூறுவா ராயினர். புலிகள் மிக்க காட்டிலே அகப்பட்டுக் கொண்ட மான்போல், இரக்கம் அற்ற அரக்கர்களால் யாங்கள் வருந்துகிறோம். தவத் துறையிலேயோ . அறத் துறையிலேயோ உரிய முறையில் ஈடுபட முடியவில்லை.

தவம் புரிய இயலாமையாலும், வேதம் ஒதாமையாலும், வேதம் ஒதுவார்க்கு உதவாமையாலும் (ஓதுவிக்காமை யாலும்), எரி வளர்த்து வேள்வி செய்யாமையாலும் எங்கட்கு உரிய நெறிமுறையினின்றும் வழுவி விட்டோம்; அதனால் யாங்கள் அந்தணர் என்னும் தகுதிக்கும் உரிய ரல்ல ராகிவிட்டோம் என்றனர்.

“மாதவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும் ஒதலெம் ஓதுவார்க்கு உதவ லாற்றலெம் மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கி னெம் ஆதலின் அந்தண ரேயும் ஆகிலம்’ (14)