பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் ( 51

அம்போடு கீழே வந்து வீழ்வர் முறையற்ற துன்பத்தினின்றும் நீவிர் நீங்குவீராக என்று ஆறுதல் கூறினான்.

"புகல் புகுந்திலரேல் புறத்து அண்டத்தின்

அகல்வ ரேனும் என் அம்பொடு வீழ்வரால் தகவில் துன்பம் தவிருதிர்நீர் எனப் பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான்’ (17)

இராமனின் அம்பு மீண்டும் அவனிடமே வந்து விடு மாதலின் அம்பொடு வீழ்வர் எனப்பட்டது. பகலவன் = ஞாயிறு. முன் ஒரு பாட்டில் இராமனை இரவி என்றார். அதற்கு ஏற்ப ஈண்டு ஞாயிறு குல மைந்தன் என்றார் கம்பர்.

மேலும் இராமன் மொழிகிறான்; அந்தணரின் இயல்பை அறியாத அற்ப அரக்கர்களின் வலிமையை யான் தொலைக்காவிடின், யான் இறந்து போவதே நல்லது; இத்தகைய உதவியைச் செய்யாவிடின் பிறந்ததனால் பெற்ற பேறு யாது?

'அறம்தவா நெறி அந்தணர் தன்மையை

மறந்த புல்லர் வலிதொலையேன் எனின் இறந்து போயினும் கன்று இது அல்லது பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ” (19) இங்கே,

"நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது’ (235) 'ஒப்புரவினால் வரும்கேடு எனின் அஃதொருவன்

விற்றுக் கோள் தக்க துடைத்து’ (220)

“சாதலின் இன்னாத தில்லை இனிது அது உம்

ஈதல் இயையாக் கடை' (230)