பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 0 53

ஆவும் அந்தணரும் எளியவர்களும் இத்தகைய மற்றவரும் துன்புறாதிருப்பதற்காகத் தம் உயிர் தந்து காப்பவர்களே தேவர்கள் தொழும் தேவராவர்:

"ஆவுக் காயினும் அந்தணர்க் காயினும்

யாவர்க் காயினும் எளியவர்க் காயினும் சாவப் பெற்றவரே தகை வானுறை தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார்’ (21)

எனவே உங்களைக் கட்டாயம் காப்பன் என உறுதி தருகிறான் இராமன். இங்கே,

"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் ............ எம்.அம்பு கடிவிடுதும் நும் அரண்சேர்மின்' (9:1-5)

என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதியும், சீவக சிந்தாமணியில் உள்ள

"நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர்பாலர் பார்ப்பார்

என்பாரை ஓம்பே னெனின் யான் அவனாக என்றான்” (443) என்னும் பகுதியும் ஒப்பு நோக்கத் தக்கன.

மற்றும், முருகனும் திருமாலும் சிவனும் வந்து தடுத்துக் காக்கினும், அறநெறி தவறிய அரக்கர்களை வேரோடு அறுப்பேன் - அஞ்சாதீர் - என்று இராமன் துணிவு ஊட்டியதும், முனிவர்கள் மகிழ்ச்சி மேலீட்டால் தம் முக்கோலைச் சுழற்றியும் மறை பாடியும் கூத்து ஆடியும் இராமனைப் புகழ்ந்தனர்.

முனிவர்களின் வேண்டுகோள்படி இராம இலக்குமணரும் சீதையும் பத்து ஆண்டு காலம் அங்கிருந்துவிட்டு, பின் அகத்தியர் இருப்பிடம் நோக்கிச் செல்ல லாயினர்.