பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் ) 55

தக்கது. கொடுப்பதை வேண்டா என மறுப்பது கொடுப் பதினும் பாராட்டத்தக்கது.

ஒருவரின் தவத்தை இன்னொருவர் பெற்றுக்கொள்வது கர்ணன் தொடர்பான பாரதக் கதையிலும் பிறவற்றிலும் அறிந்ததே. ஒருவர் அரிதின் முயன்று செய்த தவத்தை இன்னொருவர் எளிதில் பெற்றுக் கொள்வதா? அதனால் தான், இங்கே கொடுத்தவரும் கொள்ளாதவரும் மிக்க சிறப்பிற்கு உரியவராவர். ஈண்டு,

'கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”

(204: 3, 4)

என்னும் புறப்பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. நீண்ட தமிழ்:

இராமன் முதலிய மூவரும் சுதீக்கணனிடம் விடை பெற்றுக் கொண்டு, அகத்தியனது இருப்பிடம் நோக்கிச் சென்று நெருங்கினர்.

இவர்களின் வருகையை அறிந்த அகத்தியனின் மகிழ்ச்சி அளவு கடந்ததாய் ஏழுலகும் பரவிற்றாம். நீண்ட தமிழால் 3- ώl)6ύ) θ; அளந்தவனாகிய அகத்தியனின் திருவடிகளை இராமன் வணங்க அவன் வரவேற்றான்:

"ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான்

ஈண்டு உவகை வேலைதுணை ஏழுலகும் எய்த மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் நீண்ட தமிழால் உலகை கேமியின் அளந்தான்’ (36) ஆண் தகையர்=மற ஆண்மையுடைய இராம இலக்குமணர், அவர்கள் வந்தனர் எனில் சீதையும் உடன் வந்தமை சொல்லாமலே விளங்கும்.

இராமன் அகத்தியனிடம் படைக்கலம் பெற்று அரக் கரை வெல்லப் போகிறானாதலின் உவகை ஏழுலகும் பரவியது.