பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முக்னார் 59

வேதம் ஒலி வகையால் கற்பதற்குக் கடினமாதலால் 'உழக்கு மறை என்றார். அதை நோக்க, தமிழ், இன்தமிழ் - மென்தமிழ் - செந்தமிழ் - பைந்தமிழ் - தேன் தமிழ் - அமிழ்தத் தமிழ், வண் தமிழ் - ஒண் தமிழ் முதலிய அடைமொழிகளைப் பெற்றிருப்பது பொருத்தமே போலும்!

சிவன் ஒளி பொருந்திய மழுப்படையையும் நெற்றிக் கண்ணையும் ஒளி வீசும் செம்மேனியையும் உடைய

கடவுளாம்.

'ஆண் தகையர்' என்று தொடங்கும் பாடலால் தமிழின் பரப்பைக் கூறிய கம்பர், இந்தப் பாடலால் தமிழின் உயர்வைச் சொல்கிறார். உழக்கு மறை நாலினும் உயர்ந்தது தமிழ்’ என்று கூறியுள்ளார். இதைச் சுப்பிரமணிய பாரதியார்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்' (22-1)

என்ற வடிவத்தில் அறிவித்துள்ளார். சேக்கிழார் பெரிய புராணத்தில், -

"அசைவில் செழுந் தமிழ்வழக்கே

அயல் வழக்கின் துறைவெல்ல’ (192) என்று கூறித் தமிழ் அவாவைத் தீர்த்துக் கொண்டு விட்டார்.

பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடல் புராணம் - நாட்டுப் படலத்தில்.

'கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுங் தமிழ் ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”

(57)